புதிய தலைமுறை கல்வி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதிய தலைமுறை கல்வி | |
பெ.கருணாகரன் | |
வகை | சமூக விழிப்புணர்வு |
---|---|
இடைவெளி | கிழமைதோறும் |
வெளியீட்டாளர் | புதிய தலைமுறை |
நிறுவனம் | புதிய தலைமுறை |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வலைத்தளம் | www |
புதிய தலைமுறைக் கல்வி இந்தியாவில், தமிழ்நாடு, சென்னையிலிருந்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிவந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகையாகும். 2020 ஜூன் 31 தேதியோடு இப்பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டது.
வரலாறு
[தொகு]புதிய தலைமுறை இதழோடு இணைப்பிதழாக வந்து கொண்டிருந்த புதிய தலைமுறைக் கல்வி, 2010 ஆகஸ்டில் தனி வார இதழாக வெளிவர ஆரம்பித்தது. அப்போது அதன் ஆசிரியராக மாலனும், இணையாசிரியராக பொன்.தனசேகரனும் பொறுப்பேற்றுக்கொண்டு வார இதழை நடத்தினர். ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று கடைகளில் கிடைக்கும்படி இந்த இதழ் வெளிவந்து கொண்டிருந்தது.
சிறப்பாக வெளிவந்து கொண்டிருந்த புதிய தலைமுறைகல்வி இதழின் நிறுவனமானது, கொரோனாவினைக் காரணம் காட்டி 2020, மார்ச் மாத இறுதியில் அச்சிதழை நிறுத்திக்கொண்டது. ஏப்ரல், மே, ஜூன் வரை மின்னிதழ்களாக வெளிவந்த புதிய தலைமுறைக் கல்வி இதழ், 2020 ஜூன் 31 தேதியோடு, தனது இதழை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இனி அச்சிதழும், மின்னிதழும் வராது என்று புதிய தலைமுறை குழுமம் அறிவித்ததோடு, ஆசிரியர் குழுவினரில் பலரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டது. இதன் ஆசிரியராக இருந்த பெ.கருணாகரன் ‘கல்கோனா’ என்ற மின்னிதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். இதன் தலைமை உதவி ஆசிரியராக இருந்த மோ.கணேசன் வாலு டிவி என்ற யூடியூப் தொலைக்காட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார்.
நிர்வாகம்
[தொகு]நிர்வாக ஆசிரியர்
[தொகு]- ஆர். பி. சத்திய நாராயணன்
ஆசிரியர்
[தொகு]- பெ. கருணாகரன்
துணை ஆசிரியர்
[தொகு]- சுந்தரபுத்தன்
தலைமை உதவி ஆசிரியர்
[தொகு]- மோ.கணேசன்
முன்னாள் ஆசிரியர்கள்
[தொகு]- மாலன் (நாராயணன்)
- பொன் தனசேகரன்
முன்னாள் உதவி ஆசிரியர்
[தொகு]- ஜி. மீனாட்சி
அலுவலகம்
[தொகு]24, ஜி.என். செட்டி சாலை, த.பெ.இலக்கம். 4990, சென்னை - 600017
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் கல்வி முறை, தொழில் வாய்ப்புகள், புலமைப்பரிசில் வழங்கல் போன்ற பலதரப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.